வெங்கடாஜலபதியை தரிசிக்க இந்தியா வாந்தி இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே

ஆந்திரா மாநிலம், திருமலையில் உள்ள வெங்கடாஜலபதி ஆலயத்தில் தரிசனம் செய்வதற்காக இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தனது மனைவியுடன் இன்று திருமலை வந்தடைந்தார்.

இந்தியாவின் அண்டைநாடான இலங்கையின் அதிபர்கள் மற்றும் பிரதமர்கள் அவ்வப்போது திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசனம் செய்வதற்காக இந்தியாவுக்கு வந்து செல்வது வழமையான ஒன்றே.

அந்தவகையில் மீண்டும் வெங்கடாஜலபதி ஆலயத்தில் தரிசனம் செய்வதற்காக இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கொழும்புவில் இருந்து தனது மனைவி மைத்ரீ விக்ரமசிங்கேவுடன் இன்று மாலை இந்தியா வந்தடைந்தார்.

அவருக்கு ஆந்திர மாநில மந்திரி அமர்நாத் ரெட்டி மற்றும் திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், இலங்கை பிரதமரின் வருகையையொட்டி திருப்பதி மற்றும் திருமலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.