கடந்த 5 ஆண்டுகளில் 1.3 கோடி வீடுகள் – பிரதமர் மோடி

பிரதமர் மோடி

டெல்லியில் நடந்த கட்டுமான தொழில்நுட்ப மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இதுவரை 1.3 கோடி வீடுகள் கட்டியுள்ளது. முந்தைய அரசு 25 லட்சம் வீடுகள் தான் கட்டியது. ஏழை மற்றும் நடுத்தர மக்களின் சொந்த வீடு கனவை நிறைவேற்றுவோம் என்று நாங்கள் கூறிய வாக்குறுதியை நிறைவேற்றுவதில் எவ்வளவு தீவிரமாக இருக்கிறோம் என்பதை இது காட்டுகிறது என கூறியுள்ளார்.

புதிதாக கட்டப்படும் வீடுகளில் குடிநீர், மின்சாரம், சமையல் காஸ் மற்றும் இதர வசதிகள் இருப்பதையும் நாங்கள் உறுதி செய்கிறோம். வீடுகளின் தரம் மற்றும் இடவசதி ஆகியவையும் கடந்த 4½ ஆண்டுகளில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் இன்னும் அதிகம் செய்ய வேண்டியுள்ளது. எனவே இதில் தனியார் துறைகளும் ஆதரவு தரவேண்டும். ஏழைகளுக்கு உதவி செய்ய நாம் ஒன்றிணைந்து பணியாற்றுவோம்.

என்றும் 2022ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு இந்தியனும் சரியான வீடு பெறவேண்டும் என்பதே எனது கனவு. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.