ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று கோவை இன்று கோவை வருகிறார்

மகா சிவராத்திரி நிகழ்வில் பங்கெடுப்பு

இன்று கவை வரும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சூலூர் விமான படைதளம், ஈஷா யோக மைய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 3 நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார். அவரை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்கிறார்கள்.

நாளை சூலூர் விமானப்படை தளத்துக்கு செல்கிறார். அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்கிறார்.

அதனையடுத்து கோவையை அடுத்த வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோக மையத்துக்கு செல்லும் அவர் ஈஷாயோக மையத்தில் மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்கிறார்.

அங்கு மகா சிவராத்திரியையொட்டி ஈஷா யோக மைய நிறுவனர் சத்குருவின் ஞானம், தியானம், ஆனந்தம் என்ற நிகழ்ச்சி நடக்கிறது. இந்த நிகழ்ச்சிகளில் ஜனாதிபதி கலந்து கொள்வார் என கூறப்படுகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.