இங்கிலாந்தை துவம்சம் செய்த மேற்கிந்திய தீவுகள்


கிறிஸ் கெய்ல் 27 பந்தில் 5 பவுண்டரி, 9 சிக்சருடன் 77 ரன்கள்

இங்கிலாந்துடன் கடைசி ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தை 113 ரன்களில் சுருட்டியதோடு, 12.1 ஓவரிலேயே இலக்கை தொட்டு தொடரை 2-2 என சமன் செய்தது வெஸ்ட் இண்டீஸ்.

வெஸ்ட் இண்டீஸ் – இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. முதல் நான்கு போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து 2-1 என முன்னிலையில் இருந்த நிலையில்,

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்து 28.4 ஓவர்கள் மட்டுமே தாக்கு பிடித்து 113 ஓட்டங்களை எடுத்தது.

பின்னர் 114 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிறிஸ் கெய்ல், கேம்ப்பெல் ஆகியோரின் சரிப்பண ஆட்டத்தால் 12.1 ஓவரிலேயே 115 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
கிறிஸ் கெய்ல் 27 பந்தில் 5 பவுண்டரி, 9 சிக்சருடன் 77 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் தொடரை 2-2 என சமன் செய்தது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.