எல்கேஜி பட இயக்குநருக்கு கரை பரிசளித்த தயாரிப்பாளர்

LKG

ஆர்.ஜே.பாலாஜி, பிரியா ஆனந்த் நடிப்பில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் எல்கேஜி படத்தின் இயக்குநர் பிரபுவுக்கு தயாரிப்பாளர் கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.

பிரபு இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி, பிரியா ஆனந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான எல்கேஜி படத்தில் சமீபத்திய அரசியல் நிகழ்வுகளை களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

படத்தின் வசூல் 15 கோடியை தாண்டியிருக்கும் நிலையில், சமீபத்தில் படத்தின் வெற்றியை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியது. இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ் இயக்குநர் பிரபுவுக்கு புதிய கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.