வண்டலூர் பூங்காவில் 2 வங்கப்புலிகளை தத்தெடுத்தார் விஜய் சேதுபதி

வண்டலூர் பூங்காவில் 2 வங்கப்புலிகளை தத்தெடுத்த நடிகர் விஜய் சேதுபதி, பொதுமக்களும், தனியார் நிறுவனங்களும் விலங்குகளை தத்தெடுத்து வளர்க்க உதவி செய்யவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

நேற்று உலக வன உயிரின நாளையொட்டி திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி வண்டலூர் பூங்காவுக்கு சென்று பூங்காவில் உள்ள விலங்குகளை பார்த்து மகிழ்ந்தார்.

அதனையடுத்து பூங்காவில் உள்ள ஆதித்யா, ஆர்த்தி என்ற 2 வங்கப்புலிகளை 6 மாதத்திற்கு தத்தெடுத்தார். தத்து எடுக்கப்பட்ட இந்த 2 வங்கப்புலிகளுக்கும் 6 மாதத்திற்கு தேவையான உணவுகளை வழங்குவதற்காக ரூ.5 லட்சத்துக்கான காசோலையை வண்டலூர் உயிரியல் பூங்கா அதிகாரிகளிடம் நடிகர் விஜய் சேதுபதி வழங்கினார்.
அதனையடுத்து கருத்து தெரிவித்த விஜய் சேதுபதி,
பொதுமக்களும், தனியார் நிறுவனங்களும் தங்களால் முடிந்த அளவுக்கு சிறு தொகையை கொடுத்து விலங்குகளை தத்தெடுத்து வளர்க்க உதவி செய்யலாம் என கூறினார்.

வண்டலூர் பூங்காவில் 2 வங்கப்புலிகளை தத்தெடுத்தார் விஜய் சேதுபதி

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.